2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் ஒன்றியத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை நேற்று  காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் இந்த நேர்முகப்பரீட்சைக்கு தோற்றினர்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் ஒன்றியத்தின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் எம்.எஸ்.றஹீம், பணிப்பாளர் சுஹைர் ஹுஸைன், சட்டத்தரணி அஷ்ரப் றூமி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.உமர்லெவ்வை, அதன் காத்தான்குடி கிளையின் தலைவர் எம்.எஸ்.மஹ்தாப் உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.

கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்iசியல் சித்தியடைந்து இவ்வாண்டு உயர்தரம் கற்கவுள்ள மாணவர்களில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் கொடுப்பணவு வழங்கப்படவுள்ளது.

மாணவர்களின் குடும்ப நிலைக்கு ஏற்ப இவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அதன் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.உமர்லெவ்வை தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X