2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

சூறைக் காற்றினால் ஏறாவூரில் பல சேதங்கள்

Super User   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூரில் இன்று திங்கட்கிழமை மாலை வீசிய சூறைக் காற்று காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏறாவூர் புகையிரத நிலையத்தை சூழ இருந்த பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன்புகையிரத நிலைய மேடையின் கூரைகளில் காற்றினால் கழற்றி வீசப்பட்டுள்ளதாக நிலைய அதிபர் கே.எஸ். நவரசநாதன் தெரிவித்தார். அத்துடன், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஏறாவூர் புகையிரத நிலையம் இருளில் மூழ்கியுள்ளது.

புன்னைக்குடா வீதியில் இருந்த இரண்டு பெரிய அரிசி ஆலைகளின் கூரைகளும் கழற்றி வீசப்பட்டுள்ளன. இதனால் அந்த அரிசி ஆலைகளிலிருந்த அரிசி, நெல் என்பன மழை நீரில் அமிழ்ந்து போயுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--