2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பொதுபலசேனவை தடைசெய்யவும்: ரம்ழான்

Super User   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

நாட்டில் சிங்கள - முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற பொதுபலசேன அமைப்பினை உனடியாக தடைசெய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் எம்.கே.ரம்ழான் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த இன ரீதியான யுத்தத்தினை அரசாங்கம் தோற்கடித்து நாட்டு மக்களுக்கு சமாதானத்தினை பெற்றுக்கொடுத்துள்ளது. இதற்கு சாவுமணி அடித்து அமைதியாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையே இனக்கலவரத்தினை ஏற்படுத்த பொதுபலசேனாவும் இன்னும் சில இனவாதிகளும் எத்தணித்து வருகின்றனர். 

பொதுபலசேனாவின் இந்த சமூகவிரோத செயற்பாடு அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.அரசாங்கத்தோடு இருக்கும்; அமைச்சர் ஒருவர் இது விடயத்தில் துணை போகின்றார் என்பதற்காக முழுமையாக அரசாங்கத்தினை குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மையில் ஒரு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் தி.மு. ஜயரட்ன முஸ்லிம்களின் ஹலால் விடயத்தை முழுமையாக அங்கீகரித்திருந்தார். இதன்மூலம் அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இதனை சகிக்க முடியாத இனவாத சக்திகளும் எதிர்க்கட்சிகளும் முஸ்லிம்களை ஏவிவிட்டு முஸ்லிம்களையும் அரசாங்கத்தையும் வேறு வேறாக பிரித்து அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவருகின்றது.
இதன் மூலமாக எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடித்து தாங்கள் வெற்றி பெறுவவதற்கு மேற்கொள்ளும் ஒரு சதித்திட்டமே முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதமாகும்.

அத்தோடு ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட போவதாக கூறப்படும் குற்றப் பிரேணைக்கு முன்பதாக நாட்டில் இனக்கலவரத்தையும் ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--