2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

தலைக்கவசம் அணியாத பாடசாலை மாணவர்கள்மீது சட்ட நடவடிக்கை

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைக்கவம் அணியாது மோட்டார் கைச்கிள்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பாடசாலை மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக தலைமையக பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஏ.எல்.ஹிதாயதுல்லாஹ்விடம் வினவியபோது, பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற சட்டம் நீண்ட நாட்களுக்கு முன்னர் பொலிஸாரினால் விடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை பலர் உதாசீனம் செய்கின்றனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாது பயணிக்கும் பாடசாலை மாணவகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X