2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

'தமிழர்கள் ஆட்சி செய்தால் அரசியலில் இருந்து விலகுவேன்'

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

'கிழக்கு மாகண சபையினை தமிழர்கள் ஆட்சி செய்யமாட்டார்கள். அவ்வாறு ஆட்சி செயதால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்' என ஜனாதியின் இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளரமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நான் காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்பவனல்ல. காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வேண்டும் என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புமைப்புத்தான் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்றது. அதில் என்ன இருக்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதுதான் நிலைமை.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 39 வீதமும் முஸ்லிம்கள் 37 வீதமும் ஏனையவர்கள் சிங்களவர்களாகவும் உள்ளனர்.

அதிலும் தமிழர்கள் தற்போது சட்ட விரோதமாக படகுகள் மூலமும் ஏனைய வழிகளிலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும புலம்பெயர்ந்து சென்றுள்ளார்கள். இந்நிலையினைப்  பார்க்கும்போது தமிழர்கள் கிழக்கில் 32 அல்லது 33 வீதமாக குறைந்துள்ளார்கள்.

தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள். அது அவர்களின் திறமை. ஆனால் தமிழர்களிடத்தில் முன்னேற்றம் போதாமலுள்ளது. கிழக்கு மாகாணத்தில சிறுபான்மை என்றால் அது தமிழர்களாகத்தான் உள்ளனர்.

தமிழர்களின் எதிர்காலம் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை நினைத்து கவலையடைய வேண்டியுள்ளது. ஏனெனில் நிலமை அவ்வாறுதான் தற்போது சென்று கொண்டிருக்கின்றது.

13 வயதிற்குப் பின்னர் நான் தமிழில் பேசியதில்லை. வெளிநாடுகளில்தான்; வாழ்;ந்து வந்தேன். தறபோது எனது தாய் மண்ணுக்கு திரும்பி வந்து சரளமாக தமிழில் போசுகின்றேன் என்றால் எனக்கு தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் உள்ள பற்றுத்தான் காரணம்.  

'இந்தியாவினை நம்பி நாம் ஒன்றும் செய்ய முடியாது. நாம் சுயமாகவே செயற்பட வேண்டும்' என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய ஒரு கருத்தினை நான் முற்று முழுதாக ஆதரிக்கின்றேன். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

இந்தியாவை நம்பியிராமல் நாங்கள் அனைவரும் சுயபுத்தியுடன் செயற்பட்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது இந்தியாவினை நம்பியிருந்து ஏமாறி வருகின்றது.  

நாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் அதீத அக்கறை செலத்தி வருகின்றோம். மட்டக்களப்பு மாநகரை ஒரு சூரியோதய மாநகராக மாற்றுவதற்கு நான் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அது போல் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கு தற்போது சாணக்கியனாக இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இத்தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். கல்குடா தேர்தல் தொகுதிக்கு இன்னும் ஒரு அமைப்பாளர் நியமிக்கப்படவில்லை அதற்குரிய வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன' என்றார்.

  Comments - 0

 • Iya Sunday, 21 July 2013 01:55 PM

  ஓர் ஆணியும் புடுங்க வேண்டாம், அரசியலில் இருந்து விலகி கொள்ளுங்கள்...

  Reply : 0       0

  KB Sunday, 21 July 2013 06:10 PM

  ஓ...... நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது நீங்களும் அரசியல் செய்கிறீர்கள் என்று.

  Reply : 0       0

  AMBI. Monday, 22 July 2013 04:19 PM

  ஐய்யா இங்கிலிசுக்காரரே... மட்டக்கள‌ப்பில் அவர்களின் புத்த சிலையை வைக்க திட்டமிட்டுள்ளார்களே, நீங்கள் உண்மையான தமிழன் என்றால் அதை தட்டி கேளுங்களேன் பார்ப்போம். முடியுமானால் அதை நிறுத்துங்கள். சும்மா போங்கய்யா...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--