2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இலஞ்ச ஊழலுக்கெதிரான சட்ட ஆலோசனை வழங்கும் கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


நேர்மையின் புகலிடம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'ஊழல் எதிர்ப்பும் ஊழலைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு மட்டக்களப்பு கல்லடி ஓசியானிக் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட சுமார் எழுபது பேர்  இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

கிராம மட்டத்தில் தொடங்கி அதிகாரிகள் மட்டம் வரையிலும் வகைதொகையின்றி இடம்பெறுகின்ற ஊழல்களைத் தடுத்து மக்களது பணம், பொருள், நேரம், மன உளைச்சல் என்பனவற்றைத் தடுத்து மன நிறைவான ஒரு சுபீட்சத்தை நோக்கிச் செல்வதே இத்திட்டத்தின் நோக்கம் என விரிவுரையாளர்கள் பங்குபற்றுநர்களிடம் தெளிவுபடுத்தினர்.

இப்பயிற்சிப் பட்டறையை நேர்மையின் புகலிடம் நிறுவனத்தின் திட்ட அலுவலர் எஸ்.கௌசிகன், சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன், எப்.எக்ஸ்.விஜயகுமார், திட்ட முகாமையாளர் டி.எம் திஸாநாயக்க, மனிதவள அபிவிருத்தி  நிறுவன ஆலோசகர் ரொபின் அன்பழகன் குரூஸ் ஆகியோர் நடத்தினர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X