2025 நவம்பர் 08, சனிக்கிழமை

மட்டக்களப்பில் சிறிய நீர்ப்பாசனக் குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய நீர்ப்பாசனக் குளங்களை கமநல சேவைகள் அமைச்சு புனரமைக்கவுள்ள நிலையில், இதற்காக முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் வி.ஜீவானந்தம் தெரிவித்தார்.

இச்சிறிய குளங்களை புனரமைப்பதற்கு இரண்டாம் கட்டமாக மேலும்  50 மில்லியன் ரூபா  ஒதுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, வாகரை, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள சிறிய நீர்ப்பாசன குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் வி.ஜீவானந்தம் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கமநல சேவைகள் அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இக்குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X