2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

மட்டக்களப்பில் அதிகளவில் பிடிபடும் சூரை மீன்கள்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 20,000 கிலோ சூரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்;பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி மற்றும் களுவன்கேணி, ஏறாவூர் பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடலின் கரையோர பிரதேசங்களில் சிறிய ரக மங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுவதால் அதனை உண்ணுவதற்காக வரும் சூரை மீன்களே வலைகளில் அதிகளவு சிக்குவதாகவும் அவர் கூறினார்;.

மேலும், ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இவ்வாறு சூரை மீன்கள் பிடிபவடுவது வழக்கமாகுமெனவும் அவர் கூறினார்.

சூரை மீன்கள் அதிகளவு பிடிபடுவதால் ஒரு கிலோ சூரை மீன் 100 ரூபாவிலிருந்து 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்;பாளர் டொமினிக் ஜோர்ஜ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .