2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பிரேத பரிசோதனை வசதிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வெருகல், சேருவில ஆகிய பிரதேசங்களில் இடம்பெறும் தீடீர் மரணங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் வசதிகள் அந்தப் பிரதேசத்தில் இல்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்சம் திடீர் மரணத்திற்குள்ளானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வெருகல் மற்றும் சேருவில பிரதேசங்களிலிருந்து 55 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தளாய் வைத்தியசாலைக்கு அல்லது 65 கிலோமீற்றர் தொலைவிலுள்ள திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது.

இதனால் மேற்குறித்த இடங்களிற்கு பிரேதத்தை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் வெருகல் பிரதேசத்திற்கு மீண்டும் சடலத்தை எடுத்து வருவதாயின் ஆகக் குறைந்தது வாகனக் கூலியாக 30,000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாக பிரதேசப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் முகமாக வெருகல் பிரதேச வைத்தியசாலையிலேயே பிரேத பரிசோதனைக்கான ஏற்ற ஒழுங்குகள் செய்து தரப்பட வேண்டும் என்று பிரதேசப் பொதுமக்கள் கோருகின்றனர்.

வெருகல் பிரதேசத்திலேயே சடுதியாக ஏற்படும் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 13,500 பேரும் சேருவில மற்றும் கிளிவெட்டி பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 30,000 பேரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--