2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இராணுவத்திலிருந்து தப்பியோடி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இராணுவத்திலிருந்து தப்பியோடி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை எதிர்வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் என்.எம்.எம். அப்துல்லாஹ் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டுள்ளார்.
குறித்த நபருடன் அவரது உதவியாளரும் திருடப்பட்ட பொருட்களை அடகு பிடிக்கும் கடை உரிமையாளரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பின் புற நகர் பகுதிகளில் வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று பேரும் நேற்று மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பியோடித் தலைமறைவாகிய நிலையில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ராஜேஸ்வரன் மணிமாறன்இ அவரது உதவியாளர் ஜோசப் நிரஞ்சன் மற்றும் இவர்களால் திருடப்பட்டும் பொருட்களை அடகு பிடிக்கும் கடைக்காரரான தம்பிமுத்து கிருதரெட்ணம் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபருக்கு எதிராக இராணுவத்திலிருந்து தப்பியோடியமை மற்றும் ஆட்களின் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டமை ஆகிய குற்றச் செயல்களுக்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவ முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவர்கள் நேற்று முன்தினம் மட்டக்களப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .