2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ரம-ஏணி அமைப்பினால் 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மண்முனை மேற்குப் பிரதேச செயலகம் என்பவற்றின் எற்பாட்டில் மண்முனை மேற்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  ஏணி  அமைப்பின்; பணிப்பாளர் ஏ.மரியதாஸ், கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் கலாநிதி இராஜேந்திரா,மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ச.இன்பராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X