2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் இரவு நேர பொலிஸ் ரோந்து அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரில் தற்சமயம் பொலிஸாரின் இரவு ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏறாவூர் நகரில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயாவை அணிந்துகொண்டு வீடு புகுந்த இருவர் பெண் ஒருவரை மிரட்டி 15 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்தே இரவு நேர ரோந்து நடவடிக்ககைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனை விட கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோதச் செயல்கள் இடம்பெற்று வந்துள்ளதால் தற்சமயம் ஏறாவூர் நகரின் பிரதான வீதி உட்பட உளளூர்; பகுதிகளிலும் பொலிஸார் இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருப்பதோடு அது பற்றி பொலிஸாருக்கும் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X