2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 30 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ள வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி பொலிஸ் பயிற்சி பாடசாலையில் பொலிஸ் பரிசோதகராக பணியாற்றி வருகின்ற ஏறாவூரைச் சேர்ந்த மீராஸாஹிப் பௌசுல் அமீர் (வயது 43) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரான சானுக தீபால் எகலியகொட என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகிலிருந்த  மின்கம்பத்துடன் மோதியே இவ்விபத்து சம்பவித்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X