2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஆஸி. செல்ல முற்பட்ட ஐவர் கைது

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்,எஸ்.சசிக்குமார்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் படகு ஒன்றினையும்; கைப்பற்றியுள்ளனர்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்ற படகு ஒன்றில் இருந்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து வந்த படகு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்று அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைப்பற்றப்பட்ட படகு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த்ப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--