2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

குளிர்பான விற்பனைக்காக சென்றவர்கள் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை கிராமத்தில் குளிர்பானம் விற்பதற்காக சென்ற மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன் இவர்கள் பயணித்த வாகனமும் சேதமாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

காங்கேயனோடை கிராமத்திலுள்ள கடைகளுக்கு குளிர்பான விற்பதற்காக வாகனமொன்றில் மூன்று பேர் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், மேற்படி குளிர்பான வாகனம் தமது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி வாகனத்தின் மீதும் மற்றும் அதில் பயணித்த விற்பணையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இழக்கானவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .