2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

அனர்த்தத்தின்போது பாவிக்கும் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரிப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு  அனர்த்தத்தின்போது பாவிக்கும் உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தத்தின்போது பாவிக்கும் உபகரணங்கள் வழங்கிவருகின்றன. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலின் கீழ், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் அம்கோர் நிறுவனத்தின் உதவியுடன் இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்கக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் இப்பொருட்களை வழங்கி வைத்தார்.

வாகனேரி மீனவர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள், அம்கோர் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச அனர்;த்த முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இவர்களுக்கு சமையல் பாத்திரங்கள், மெகா ஒலிபெருக்கிகள், அங்கிகள், சமையல் அடுப்புக்கள் உட்பட பல பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--