2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

லேபல் இடாத மென்பானங்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு உரிய சுட்டுத்துண்டிடல் (லேபல்) இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான மென்பானங்களை  காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையங்களில் காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு உரிய சுட்டுத்துண்டிடல் (லேபல்) இல்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த மென்பானங்களை கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு உரிய சுட்டுத்துண்டிடல் (லேபல்) இல்லாமல் இலங்கையின் வியாபார சட்ட ஒழுங்குகளை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  3,120 மென்பான போத்தல்களையும் 2,400 மென்பான பைக்கற்றுக்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மொத்தமாக விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களிலிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றினை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--