2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

வெள்ளப்பெருக்கை தடுக்கும் நோக்கில் வடிகான்கள் துப்புரவு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வெள்ளப் பெருக்கை தடுக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவின் பிரதான வீதியில் உள்ள வடிகான்களை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் பங்களிப்புடன் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் உள்ள வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் காலங்களில் மழைகாலம் என்பதால் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் நோக்கிலேயே இவ் வேலைத்திட்டம் சனிக்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--