2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

யானைகள் தாக்கியதில் நால்வர் காயம்

Kanagaraj   / 2014 மார்ச் 23 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  போரதீவுப்பற்று   பிரதேசசெயலகப்பிரிவின்   திக்கோடை   கிராமத்தின்  குடியிருப்பினுள் இன்று அதிகாலை புகுந்த  காட்டு  யானைகள்  சேதங்களை  உண்டுபண்ணியதாக போரதீவுப்பற்று   பிரதேச  செயலாளர்  என்.வில்வரெட்னம்  தெரிவித்தார்.

இன்று  அதிகாலை   3  மணியளவில்யானைகளின்  தாக்குதல்களால்  காயமடைந்த  நால்வர்  களுவாஞ்சிக்குடி  ஆதார  வைத்தியசாலையில்   அனுமதித்ததாகவும்  ஒருவரை  மேலதிக சிகிச்சைக்காக  மட்டக்களப்பு  போதனா  வைத்தியசாலைக்கு   இடமாற்றியதாகவும்  பதில்  வைத்திய  அத்தியட்சகர்  குணராஜசேகரம்  தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள்    ஒரே  குடும்பத்தைச்சேர்ந்த  இரண்டு  பெண்களும்  இரண்டு  ஆண்களும்  ஆவர். இவர்களில்  சிறுவன்   ஒருவனும்  அடங்குகின்றார்.வீட்டினுள்  உறங்கிக்கொண்டிருந்தபோது  இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.யானை  வீட்டிற்குள்  புகுந்தபோது  ஓடித்தப்பியதால்  மயிரிழையில்  நால்வரும்  உயிர்தப்பியுள்ளனர். 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .