2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பட்டிப்பளை பிரதேச இளைஞர் போட்டி

Super User   / 2014 மார்ச் 25 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


பட்டிப்பளைப் பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட குழு விளையாட்டுக்கள் திங்கட்கிழமை (24) அரசடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில இடம் பெற்றன.

இதன்போது கபடி மற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் இடம் பெற்றன.

இதில் ஆண்களுக்கான கபடி போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தையும், பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் அரசடிதீவு விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டன.

ஏனைய போட்டிகள் எதிர்வரும் 05ஆம், 06ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .