2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

தில்லங்குழி ஆறு சிரமதானம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 26 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுக்காமுனை தில்லங்குழி ஆறு சிரமதானத்துக்கு உட்படுத்தப்பட்டு ஆற்றை மூடிக்கிடந்த சல்பீனியா தாவரங்கள் மற்றும் நீர்மூடித் தாவரங்கள் போன்றன அகற்றப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (25) இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈச்சிலம்பற்று, கறுக்காமுனை, இலங்கைத்துறை, சின்னக்குளம், உடப்புக்கேணி ஆகிய கிராமத்தவர்கள் இந்த ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும் இந்த ஆறு நீண்ட காலமாக சல்பீனியாத் தாவரங்களாலும் இதர கழிவுகளினாலும் மூடப்பட்டிருந்தது.

இதனை கிராமத்தவர்கள், சமூர்த்தி பயனாளிகள், சமூர்த்தி உத்தியோகஸ்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்;, கிராம உத்தியோகஸ்தர் என அனைவரும் இணைந்து சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்துள்ளனர்.

கறுக்காமுனை தில்லங்குழி ஆறு சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்ட பின்னர் தற்சமயம் மீண்டும் மக்கள் இந்த ஆற்றை நீராடுவதற்கும் மற்றும் இன்ன பிற தேவைகளுக்குமாக நீரைப் பெற்றுக்கொள்வதற்கும் மீன்பிடிப்பதற்கும் ஆரம்பித்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சிவகலா சோமசுந்தரம் தெரிவித்தார்.
சுமார் 500 மீற்றர் நீளமான ஆற்றின் பகுதி துப்புரவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .