2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

தகுதியானவர் அரசியலுக்கு வருமிடத்து நான் ஒதுங்குவேன்: சுபைர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தகுதியான ஒருவர் அரசியலுக்கு  வருமிடத்து, தான் அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு தயாரென்று    கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூரில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் 160 குழந்தைகளுக்கு ஓட்டுப்பள்ளிவாசல் பாலர் பாடசாலை வளாகத்தில் பால் மாக்கள்   திங்கட்கிழமை (07) வழங்கப்பட்டன.  இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எனது குறுகிய கால அரசியல் பிரவேசத்தில் எமது ஊருக்கும் மாவட்டத்துக்கும் மாகாணத்துக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துள்ளேன். எமது ஊரின் முக்கிய தேவையாக இருந்த ஆதார வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை,  பொதுச் சுகாதாரப் பணிமனை, கால்நடை வைத்தியர் காரியாலயம், இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க  வேலைவாய்ப்புக்கள், வீதிகள் புனரமைப்பு, ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் குடிநீர் வசதிகள், றூகம் கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் என்று எனது சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வாறெல்லாம் இந்த ஊரின் நலன் கருதி செயற்படும் என்னை, கடந்த மாகாணசபைத் தேர்தலில் தோற்;கடிப்பதற்கு பல்வேறு அரசியல் தலைமைகள் கங்கணம் கட்டின. என்னை அவமானப்படுத்தி அவதூறு கூறி முயன்று பார்த்தார்கள். என்ன நடந்தது தாய்மார்களே? அவர்களை தோற்கடித்து, என்னை வெல்ல வைத்தானே அந்த இறைவனுக்கே  எல்லாப் புகழும்.

என்னைத் தோற்கடிப்பதற்கு  சதி செய்யத்  தேவையில்லை. மாறாக எமது ஊரின் ஏழை மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயற்படும் ஒரு அரசியல் தலைமைத்துவத்தை எனக்கு இனங்காட்டுங்கள்.  நானாகவே அரசியலிலிருந்து ஒதுங்குகின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X