2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஆரையம்பதி பிரதேசசபை முதலிடம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புறநெகும தேசிய வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் செயற்படுத்திய உள்ளூராட்சி மன்றங்களில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆரையம்பதி பிரதேசசபை முதல் இடத்தினைப்பெற்றுள்ளது.

உலக வங்கியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடாத்திய கணீப்பீட்டின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட ஆரையம்பதி பிரதேசசபைக்கு நினைவுக்கேடயமும் 50இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரிசினை ஆரையம்பதி பிரதேசபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டி.பி.விஜயசுந்தரவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக புறநெகும வேலைத்திட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் மக்கள் சிறந்த பயனை அடைவைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தியமையை கருத்தில்கொண்டு இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--