2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

டெங்கு நோயை தடுக்க தீவிர நடவடிக்கை

Super User   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிஹாரா லத்தீப்


காத்தான்குடி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் திணைக்களம் தீவிர நடவடிக்கையினை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ தொழிநுட்பக்கல்வி அமைச்சின் பணிப்புரைகளுக்கமைய இந்த தீவிர நடவடிக்கையில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிமனையும் காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் காத்தான்குடி நகர சபையும் தற்போது இறங்கியுள்ளது.

இதற்கமைய இப்பிரதேசத்தில் டெங்கு நோய் பரவியுள்ளதாக இனங்காணப்பட்ட காத்தான்குடி ரிஸ்வி நகரில் மஞ்சந்தொடுவாய் எல்லைப் பகுதி உமர்சரிப் வீதி காத்தான்குடி 1ம் குறிச்சிப் பகுதிகளில் குடும்பத் தலைவர்கள், பிரத்தியே கற்கை நிலையங்கள் அரபு மதரசாக்களின் நிருவாகிகளுக்கு விசேட டெங்கு அறிவூட்டல்கள் நடைபெற்று வருவதுடன் அதிகமான டெங்கு நோய் பரவும் குடம்பிகள் காணப்படும் குடிநீர் கிணறுகளில் பாதுகாப்பான மீன் குஞ்சுகள் இடுதல் வேலைகளும்  தற்போது இடம்பெற்று வறுகின்றன.

(இவை தவிர குறித்த டெங்கு நோய் இனம் காணப்பட்ட பகுதிகளில் துப்பரவற்ற வளவுகள் டெங்கு நோய் பரவாதவாறு துப்பரவு செய்யும் பணிகள் மற்றும் நுளம்பு ஒழிப்புக்கான மருந்துப்புகை விசுறுதல் என்பனவும் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்துவதாக காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.நசுறுதீன் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் டெங்கு நோய் பரவுவதாகவும் தொடக்க காலத்தில் 7 ½ வயது பாடசாலை சிறுமி டெங்கு நோயால் மரணித்ததாகவும் இதுவரை 30 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி நசுறுதீன் தமது  மேலும் தெரிவித்தார்.

பொருளாளாதார அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுக்க கூடிய வகையில் கவனம் செலுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினை கேட்டுக் கொண்டதற்கமைய இந்த பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு தீர நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X