2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இளைஞர் மாநாடு: மட்டக்களப்பிலிருந்து இருவர் தெரிவு

Kogilavani   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

இந்த மாநட்டில் கலந்துகொள்வதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் செயலாளர் புவனேந்திரா விஜிதா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் சுந்தரமூர்த்தி தட்சணானந்தமூர்த்தி ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான முன்னோடி பயிற்சி செயலமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பெண்டேசனில் நடைபெறவுள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் மேலும் தெரிவித்தார். (படங்கள்: ரீ.எல்.ஜவ்பர்கான்)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--