2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

பாவனைக்குதவாத அரிசி அழிப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து பாவனைக்குதவாத  25 கிலோகிராம் நிறையுடைய  26 அரிசி பைக்கட்டுக்கள்  வெள்ளிக்கிழமை (25) கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஆர்.ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்வர்த்தக நிலையத்தில் தரம் குறைந்த அரிசி விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,  அவ்வர்த்தக நிலையத்தை சோதனையிட்டதாகவும் இதன்போது பாவனைக்குதவாத அரிசியை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

பாவனைக்குதவாத அரிசி ஓட்டமாவடி ஆற்றில் கொட்டி  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளால் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .