2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மது பாவனைக்கெதிராக விழிப்புணர்வு பேரணி

Menaka Mookandi   / 2014 ஜூலை 02 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
,ரீ.எல். ஜவ்பர்கான்

மதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று புதன்கிழமை நடத்தப்பட்டது.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து 46 சங்கங்களின் அங்கத்தவர்கள் பங்கேற்றனர்.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி மனோகர் செல்வி தலைமையில் இடம்பெற்ற இந்த ஊர்வலம், காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமாகி மது பாவிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றிய பதாதைகளை சுமந்தவாறு மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் வரை சென்றது.

இறுதியில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவியினால், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் மகஜரொன்றைக் கையளித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .