2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

மாணவியை காணவில்லை

Kanagaraj   / 2014 ஜூலை 03 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்.

மட்டக்களப்பு, செங்கலடி மத்திய கல்லூரியின் கல்வி பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கடந்த பத்து நாட்களாக காணவில்லையென ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (03) முறையிடப்பட்டுள்ளது.

வந்தாறுமூலை, உப்போடை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கோபாலப்பிள்ளை ஐஸ்வர்யா என்ற மாணவி கடந்த மாதம் 22 ஆம் திகதி அதிகாலை கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

'தனவந்தர் ஒருவரது உதவியுடன் தான் உயர் கல்வியைத் தொடரப் போகிறேன். ஐந்து வருடங்களின் பின்னரே வீடு திரும்புவேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .