2021 மார்ச் 04, வியாழக்கிழமை

நடத்தையில் மாற்றம் செயலமர்வு

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சர்வதேச மன நல ஆரோக்கிய தினத்தைக் முன்னிட்டு, நடத்தையில் மாற்றம் என்ற கருப்பொருளிலான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

வாழைச்சேனை வை.எம்.சி.ஏ அமைப்பும் சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையும் இணைந்து இச்செயலமர்வை நடத்தின.
வாகரை மத்தி கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 30 பேர்;, மேற்படி செயலமர்வில் பங்குபற்றினர்.

இளைஞர்களையும் சமூகத்தையும் பலப்படுத்துதல், போதைத் தவிர்ப்பு, வாழ்க்கைத் திறன், தியானம் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இச்செயலமர்வு இடம்பெற்றது என்று வளவாளர் ஜி. விஜயதர்ஷன் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .