2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பிறந்து  03 நாட்களேயான சிசுவொன்று, தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாங்கேணி பாம் கொலனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 17ஆம் திகதி வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் இச்சிசு  பிறந்தது. சுகப்பிரசவத்தின் பின்னர் தாயும் சிசுவுமாக  வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடு சென்றனர்.

தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த இச்சிசு   திடீரென்று வீரிட்டுக் கத்தியதுடன்,  மயக்கமடைந்தது.  உடனடியாக இச்சிசுவை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது,  வட்டவான் பகுதியில் முச்சக்கரவண்டி பழுதடைந்தது.

இந்நிலையில், முச்சக்கரவண்டியை திருத்திக்கொண்டு வைத்தியசாலையில் சிசுவை அனுமதித்தபோது, சிசு உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறினர்.

தனது முதலாவது சிசு இதுவெனவும் சிசுவின் தாய்  ரீ.ரூபாஜினி  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .