2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இமாம்கள் மற்றும் கதீப்மார்களின் பணி மகத்தானது: ஹிஸ்புல்லாஹ்

Gavitha   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பள்ளிவாயல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களின் பணி மகத்தானது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்களின் கதீப்தார் மற்றும் இமாம்கள் சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட ஹஜ் பெருநாள் மற்றும் முஹாரம் இஸ்லாமிய புதுவருட ஒன்று கூடலில் சனிக்கிழமை (25) காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இமாம்கள் மற்றும் கதீப்மார்களை மார்க்க ரீதியாக மாத்திரமல்லாது வெளியிலிருந்து வரும் சவால்களுக்கும் முகம் கொடுக்க கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக பயிற்சிகள் செயலமர்வுகள் நடாத்தப்படல் வேண்டும்.

எந்த துறையினரை எடுத்துக் கொண்டாலும் அந்த துறையினருக்கு பயிற்சிகள் முக்கியமானதாகும். அப்போதுதான் அந்த துறையில் அவர்கள் முன்னேறுவார்கள்.

அதேபோன்றுதான் இமாம்கள் மற்றும் கதீப்மார்களை அவர்களின் துறையில் பயிற்றுவிப்பதற்கு அவர்களுக்கு, செயலமர்வுகள் நடாத்த வேண்டும்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் மற்றும் இமாம்கள் சம்மேளனத்தினால், இவ்வாறான பயிற்சி செயலமர்வுகளை நடாத்த வேண்டும். இந்த நிறுவனமானது சிறப்பாக இங்கு செயற்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கின்றது என பிரதியமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.இஸ்மாலெவ்வை, மட்டக்களப்பு மத்தி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.இப்றாகீம், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.சி.பதுர்தீன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் மற்றும் இமாம்கள் சம்மேளனத்தின்  செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .