2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

செங்கலடியில் விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு மலசலகூடங்கள்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


செங்கலடிப்பிரதேசத்தில் இனங்காணப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடைய  இனங்காணப்பட்ட  குடும்பங்களுக்கு சுவிஸ் முனைப்பு அமைப்பினால் மலசலக்கூடங்கள் அமைத்துகொடுக்கப்பட்டுள்ளன.

மலசலக்கூடங்களை கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(27)   கிராம சேவையாளர் வி.கனகரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் க.சத்தியவரதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மலசலகூடங்களை கையளித்தார்
சுவிஸ் முனைப்பு அமைப்பு இலங்கையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கி வருகின்றது.

கடந்த 4 வருடங்களாக இயங்கிவரும் இவ் அமைப்பினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சுயதொழிலில் ஈடுபடுவதற்காகவும், கல்விக்காகவும், இன்னோரன்ன உதவிகள் வழங்கப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .