2021 மார்ச் 04, வியாழக்கிழமை

திண்மக்கழிவை தரம் பிரித்துக் கொடுக்காவிடின் சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் திண்மக்கழிவை தரம் பிரித்துக் கொடுக்காவிடின்,  சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று  காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் இவ்வாறு  கூறினார்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

'காத்தான்குடி நகரசபைப்பிரிவில் திண்மக்கழிவுகளை (குப்பைகளை) கொட்டுவதில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வந்தோம். காத்தான்குடியில் நாளொன்றுக்கு 50,000 கிலோ குப்பைகள் சேருகின்றன. இதில் 60 சதவீதமானவை உக்கும்; குப்பைகள்.  20 சதவீதமானவை மீள்சுழற்சிக்கான குப்பைகள். இன்னும் 20 சதவீதமானவை புதைக்கப்படக்கூடிய குப்பைகள்.

குப்பைகளை சேகரித்துக் கொட்டுவதற்கு இடமில்லாமல் சிரமங்களை எதிர்நோக்கிவந்தோம். அட்டாளைச்சேனை பிரதேசத்;துக்கு குப்பைகளை கொண்டுசென்றோம். அதேபோன்று, மண்முனைப்பற்று பிரதேச சபைப் பிரிவில் பாலமுனை கிராமத்திலுள்ள காணியொன்றில் குப்பைகளை கொட்டுவதற்குச்; சென்றோம். ஆனால், அங்கெல்லாம் குப்பைகளை கொட்டமுடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில்,  இதற்கான நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக அரச காணியொன்றை பெற்றுத்தருமாறு அரசாங்க அதிபரிடம் கேட்டோம். கிழக்கு மாகாணசபையிடமும் கோரினோம். இம்முயற்சியும் கைகூடவில்லை.

பின்னர், காத்தான்குடி மக்கள் வழங்கிய உதவியுடன் காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் ஐந்து ஏக்கர் காணிகளை ஐந்து கோடி ரூபாய் செலவில் வாங்கினோம். தற்போது இக்காணியில் திண்மக்கழிவு முகாமைத்துவம், மீள்சுழற்சி, பசளை தயாரிப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்றுவருகின்றன.

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் 06 வலயங்களாக பிரிக்கப்பட்டு 02  வலயங்களில் குப்பைகளை சேகரிக்கின்றோம்.

காத்தான்குடி ஐந்தாம் குறிச்சிப்பகுதியில் ஆற்றங்கரையோரம் குப்பைகளை கொட்டிவந்தோம். அங்கு குப்பைகளை கொட்டவேண்டாமென்று பொதுமக்கள் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதால், நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு மாதகால அவகாசம் தந்துள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் சூழல் சுற்றாடல் அதிகாரசபையின் மேற்பார்வையுடன் ஒரு மாதத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 11.11.2014 அன்று இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள பொதுமக்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் தங்களது திண்மக்கழிவுகளை (குப்பைகளை) உக்கும் குப்பைகள், உக்காத குப்பைகளென்று தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

இதற்காக காத்தான்குடி நகரசபைப் பிரிவில் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில்  உக்கும் குப்பைகளையும் புதன்கிழமைகளில் உக்காத குப்பைகளையும் சேகரிக்கப்படவுள்ளன. இதை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள பொதுமக்கள் இதை கருத்திற்கொண்டு காத்தான்குடி நகரசபை சுகாதார தொழிலாளர்கள் வரும்போது செயற்பட வேண்டும்' எனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .