Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோடை காலங்களில் அதிகளவில் குடிநீர் பிரச்சினையினை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு உன்னிச்சைகுளத்தில் இருந்து குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நகர அபிவிருத்தி நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், நீர்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கல்குடா தொகுதி மற்றும் மட்டக்களப்பு தொகுதி ஆகியவற்றுக்கு குடிநீரைப்பெற்றுக் கொடுப்பதற்கான, உயர்மட்டகூட்டம் வெள்ளிக்கிழமை (30) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான் உட்பட பல பகுதிகளுக்கு நீர் விநியோக திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
கித்துள் - உறுகாமம் குளங்களை இணைத்து நீர்விநியோக திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில். அது நீண்ட காலத்திட்டம் என்ற வகையில் குறுகிய காலத்துக்குள் திட்டம் ஒன்றை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறுக்கிய காலத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் உன்னிச்சைகுளத்தில் இருந்து குடிநீர் திட்டத்தை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்காக 20 பில்லியன் ரூபாய் தேவைப்படும் எனவும் பொறியியலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன் கீழ் அந்த திட்டத்துக்கு தேவையான நிதியைப் பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் குறித்த திட்டத்துக்கு தேவையான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
41 minute ago
46 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago
6 hours ago