Princiya Dixci / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பகல், இரவு வேளைகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி கால்நடைகளினால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கல்லாறு, ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு மற்றும் மாங்காடு ஆகிய பிரதேசங்களின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்கள் அலைந்து திரிவதனால் பிரதான வீதியினால் பிரயாணம் செய்யும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கட்டாக்காலி மாடுகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை தொடர்ச்சியாக முன்னெடுக்காமல் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளன.
கால் நடைகள் இரவு நேரங்களில் பிரதான வீதிகளில் தங்குவதால் அடிக்கடி வாகன விபத்துக்களும் இடம்பெறுகின்றன.
எனவே, இதனைத் தவிர்ப்பதற்காக கால்நடை வளர்ப்பாளர்கள் அவற்றினை உரியமுறையில் பராமரிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் கால்நடைகளின் நடமாட்டத்தை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



11 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago