Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்ததன் காரணமாக மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை மேற்படி படகில்; மீனவர்கள் மூவர் இணைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதன்போது, திடீரென்று படகு கவிழ்ந்ததால் கறுவப்பங்கேணியை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் விஜயகுமார் (வயது 40) என்ற மீனவர் காணாமல் போயுள்ளார்.
அதேவேளை, ஏனைய இரு மீனவர்களும் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கடற்படையினர் மற்றும் மீனவர்களும் இணைந்து காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
15 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago