Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாகனங்களை கடத்திவந்து அவற்றை மாற்றம் செய்து சட்டவிரோத ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று வியாழக்கிழமை இரவு தாம் கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு விஷேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
காத்தான்குடி நகரில் மேற்படி சந்தேக நபரால் விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத வாகனத்தை கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சந்தேக நபர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் என்றும் பின்னர் சமூக வாழ்வுக்கு திரும்பும் பொருட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகயிலிருந் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் திருட்டு வாகன மோசடி விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
6 hours ago
8 hours ago