2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நஸீர் அஹமட்டை வாழ்த்தி துண்டுப்பிரசுரங்கள் வெளியீடு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான  நஸீர் அஹமட்டை வாழ்த்தி ஏறாவூரில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் பிரதேச மத்திய குழுவின் செயலாளர் யூ.எல்.முஹைதீன் பாவாவினால் வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமன விடயத்தில் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல்  நடுநிலையாக நின்று சாணக்கியமான முடிவை எடுத்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தீர்மானத்தை பாராட்டுகின்ற அதேவேளை,  ஏறாவூருக்கு பெருமை தேடித்தந்து அடுத்த முதலமைச்சராக  போகும் நஸீர் அஹமட்டையும் இந்த ஊர் வாழ்த்தி வரவேற்கின்றது.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சராக கடந்த காலத்தில் பதவியிலிருந்தபோது இன, மத பேதம் பாராது பல்வேறு சேவைகளை புரிந்த நஸீர் அஹமட், நாட்டின் முன்னணி தொழிலதிபரும் பன்மொழி ஆற்றலும் உலகளாவியத் தொடர்புள்ளவரும் என்பதால், அவர் கிழக்கு மாகாண முதலமைச்சராவதனால் இந்த மாகாணத்தில் வாழும் அனைத்து சமூக மக்களும் பாரபட்சமில்லாத சேவைகளை பெறுவர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X