Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
'உண்மையில் ஒருவருக்கு அறம் இருக்கவேண்டும். அறம் இருந்தால், அவருக்கு ஆன்மிகம் வளரும். ஆன்மிகம் வளர்ந்தால், அடுத்த கட்டத்துக்கு நாங்கள் செல்லமுடியும். ஆனால், ஆன்மிகம் மட்டும் வளர்ந்தால் போதாது. அரசியலிலும் வளர்ச்சியடையவேண்டும். ஏன் இதை நான் கூறுகின்றேன் என்றால், தமிழராகிய நாங்கள் ஆன்மிகம், அரசியல், சமூகம் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். அது மாத்திரமின்றி ஆன்மிகமும் அரசியலும் இரண்டறக் கலந்து இருக்கின்றன. இதற்கு உதாரணமாக கடந்த அரசியலில் ஆன்மிகவாதிகள் அரசியல்வாதிகளாக இருந்தார்கள்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, செட்டிபாளையம் சிவனாலயத்தின் பவள விழாவை முன்னிட்டு 'ஆனந்தகிரி' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (08) செட்டிபாளையம் சிவனாலய முன்றலில் நடைபெற்றது. இந்த விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கலை பண்பாடுகளை காப்பாற்றவேண்டும் என்று பல நிகழ்வுகளை தற்போது நாங்கள் நடத்திவருகின்றோம். ஆனால், இவற்றை நாங்கள் நடத்துவதாயின், நிலம் வேண்டும். அதை பாதுகாக்கவேண்டும். இதை பாதுகாப்பதாயின், எங்களுக்கு அரசியல் பலம் வேண்டும். இந்த அரசியல் பலத்தை யாரிடமிருந்து பெறவேண்டும் என்பதை நாங்கள் தெரிவுசெய்யவேண்டும். தெரிவுசெய்யும் அரசியல் பலம் எமது மொழி, கலை, கலாசாரம் இவற்றுக்கு மேலாக எமது இனத்தை பாதுகாக்கின்ற பலமாக இருக்கவேண்டும்.
நாங்கள் அஹிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக இனத்தின் விடுதலைக்காக அறுபது வருடகாலம் போராடி இன்றும் விடுதலை இல்லாத இனமாக வாழ்கின்றோம். அஹிம்சை ரீதியான போராட்டத்திலும் ஆயுத ரீதியான போராட்டத்திலும் நாங்கள் இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளோம். ஆனால், எங்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை' என்றார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago