Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவான் பகுதியில் திங்கட்கிழமை (9) காலை இடம்பெற்ற விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.நாகேஸ்வரி (வயது 44) என்ற குடும்பப்பெண் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
வானொன்று மோதியே இந்தப் பெண் மரணமடைந்துள்ளார். மேற்படி வான் பின்புறமாக வேகமாக திருப்பியபோது, அவரது கடைக்கு அருகில் நின்ற இந்தப் பெண் மீது மோதியுள்ளது. இந்த நிலையில், இவர் வான் சில்லுக்குள் அகப்பட்டுள்ளார்.
மேற்படி வான் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், வானையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .