Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு கிரான் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொப்பிகல் மீயாங்கல்குள கிராம சேவகர் பிரிவு பொதுமக்கள் திங்கட்கிழமை (9) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிரான் பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், தங்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தருமாறும் அரசாங்கத்தால் பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட அரச மானியப்பொருட்களையும் அரசசார்பற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட கால்நடை மற்றும் மானியப்பொருட்களையும் அரசாங்கத்துக்கு சொந்தமான அரச உடைமைகளையும் மோசடி செய்துகொண்டிருக்கும் கிராம சேவகரை இடமாற்றம் செய்யுமாறும் கோரப்பட்டது.
இதன்போது, பல்வேறு கேரிக்கைகள் அடங்கிய மகஜரை, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு முகவரியிட்டு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரத்திடம் கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர், குறித்த கிராம சேவகருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பின் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் குறித்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

13 minute ago
25 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
48 minute ago
1 hours ago