2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் நாளை கடமைகளைப் பொறுப்பேற்பார்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், திருகோணமலையிலுள்ள கிழக்கு மகாண சபைக் கட்டடத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் தனது கடமைகளை, செவ்வாய்க்கிழமை (10) பொறுப்பேற்கவுள்ளதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் தெரிவித்தார்.

இந்நிலையில் நாளைய தினம் கிழக்கு மாகாண சபை அமர்வும் கூடவுள்ளது.

கடந்த 6ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X