Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக முன்னாள் விவசாய அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், தமது கடமைகளை செவ்வாய்க்கிழமை (10) பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்தே அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மாகாண சபையின் வளாகத்திலுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர், தமது ஆட்சிக்காலத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுக்கு முயற்சி செய்வேன் எனத் தெரிவித்தார்.
அத்துடன், தமது செயற்பாடுகளில் எவ்வித மத, இன பாகுபாடுகளும் இன்றி மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் சமத்துவமான சேவையை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இளைஞர்களின் வேலை வாய்பை அதிகரிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டார்களின் வருகையை அதிகரிக்கச் செய்து கிழக்கு மாகாணத்தை வளம் பொருந்திய மாகாணமாக மாற்ற பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவியை தமக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த 6ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளூநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் கிழக்கு மாகாண புதிய முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
01 Jul 2025