2021 மே 06, வியாழக்கிழமை

'தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை கட்டியெழுப்பப்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை  கட்டியெழுப்பப்படவேண்டும் என்று காத்தான்குடி கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள குருமன்வெளி சிவசக்தி மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், அன்பளிப்பு பொருட்களை வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமது பிராந்தியமானது தமிழ், முஸ்லிம் மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பிராந்தியமாகும். இந்த மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களின் இணைப்பு என்பது முக்கியமாகும். இந்த இரண்டு சமூகங்களின் ஒற்றுமை, இன ஐக்கியம், நல்லுறவு என்றும் பேணப்படவேண்டும்.

எமது காத்தான்குடி கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த பாடசாலை உபகரணங்கள் மற்றும் அன்பளிப்பு பொருட்கள்  வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தப் பாடசாலை மாணவர்களையும் அதற்காக தெரிவுசெய்தோம்' என்றார்.

இந்த நிகழ்வில்; பாடசாலை அதிபர் கே.சத்தியமோகன், ஆசிரியர் என்.நாகேந்திரன், காத்தான்குடி கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர் எம்.வை.ஆதம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 30 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .