2021 மே 17, திங்கட்கிழமை

பொது நூலகம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 12 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


செலான் வங்கியின் கூட்டுறவு சமூக சேவைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் 100 ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் பொது நூலகங்களை திறந்த வைக்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (12) பொதுநூலகம் திறந்து வைக்கப்பட்டது.


செலான் வங்கியின் முகாமையாளர் திருமதி பத்மஸ்ரீ இளங்கோவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுநூலகத்துக்கான புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.


கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பி.நிமல்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செலான் வங்கியின் உதவி பொதுமுகாமையாளர் ரஞ்சன் பத்மநாதன், வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சிவஞானம் முத்துகீசன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், வங்கியின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .