Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால், வாவி மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வாவியில் பிடிபடுக்கப்படும் மீன்கள் ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
வெப்பநிலை அதிகமாக உள்ளதினால்; மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு மீனவர்கள் செல்கின்றமை குறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாவியில் மீன்பிடி நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மணலை உள்ளிட்ட மீன்கள் பிடிபடுவதாகவும் வாவி மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவி மீன்பிடியை நம்பி 13,265 வாவி மீனவத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று அம்மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ருக்ஷான் குறூஸ் தெரிவித்தார்.
7 minute ago
13 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
22 minute ago
32 minute ago