2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஆபாசமாக நடக்க முற்பட்ட இராணுவச் சிப்பாய் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

பாசிக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருடன் ஆபாசமாக நடக்க முற்பட்டதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த பெண்; செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த பெண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இவர் இங்குள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த 3 நாட்களாக தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் வழக்கம் போல் நேற்று செவ்வாய்கிழமையும் கடலில் குளித்துக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, சந்தேக நபரும் அக்கடலில் குளித்துள்ளார். அப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு தமது மர்ம உறுப்பை காட்டி ஆபாசமாக நடந்து கொண்டதுடன், தனக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன் தன்னை பின் தொடர்ந்து மேலும் அசௌகரியங்களை 2 நாட்களாக  தொடர்ந்து ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமக்கு ஏற்பட்ட இவ் விபரீதம் எந்தவொரு பெண்ணுக்கும் இடம்பெறக் கூடாது எனவும் குறித்த சந்தேக நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .