2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் இரு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் நேற்று  திங்கட்கிழமை கட்சியொன்றின் ஆதரவாளர்கள் இருவர்  தாக்குதலுக்குள்ளான நிலையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த ஆதரவாளர்கள் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .