2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் ஸ்ரீகணேசா பத்திரகாளி அம்பாள் கோவில்  வளவுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கு அடிக்கல்  இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீகணேசா காளிகா ஆலய பரிபாலன சபையினரும் ஊர் மக்களும் சனசமூக நிலைய நிர்வாகிகளுமாகச் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஆலய பிரதம குருக்கள் கே. வாமதேவன், ஆலய பரிபாலன சபைத் தலைவர் பி. கஜேந்திரகுமார், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் நிலோஜினி மோகனதாஸ், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரும் அறிவாலயம் கல்வி அபிவிருத்திச் சபையின் தலைவருமான பரமேஸ்வரி இளங்கோவன் உட்பட ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .