2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, சின்ன உப்போடைப் பகுதியிலுள்ள வீட்டு வளவொன்றில் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று இனந்தெரியாதோரினால் திங்கட்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், சுமார் 225,000 ரூபாய் பெறுமதியான இந்த மோட்டார் சைக்கிள் முற்றாக எரிவடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கள் நிறுத்திவைக்கப்பட்ட  இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளொன்றும் எரிவடைந்துள்ளது.

மேற்படி வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .